சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2025ஆம் ஆண்டு விளக்கு விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.
2025ஆம் ஆண்டின் வசந்த விழா, உலக பொருள் சாரா மரபுச் செல்வத்தில் சேர்க்கப்பட்ட பிறகு நடைபெற்றமுதல் வசந்த விழாவாகும்.
சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த வசந்த விழா மற்றும் விளக்கு விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள், சீன நாகரிக மற்றும் பண்பாட்டின் செழுமையான அம்சங்களை நவீன தொழில் நுட்பங்களுடன் வெளிகாட்டி, சீனாவை அறிந்துகொள்ளும் சாளரமாக மாறியுள்ளன.
தொலைக்காட்சி மற்றும் கைபேசி ஊடக மேடைகளில், 2025ஆம் ஆண்டு விளக்கு விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டவர்களின் புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டை விட பெரியளவில் அதிகரித்துள்ளன. சி ஜி டி என் என்ற சீன சர்வதேச தொலைகாட்சி நிலையம், 82 மொழிகளின் மூலம் இந்நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது.