குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை ஒட்டி, அங்கு விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,376 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி கடந்தாண்டு ஜூனில் இஸ்ரோவிடம் ஒப்படைத்தது. இதேபோல் ராக்கெட் ஏவுதளத்தை ஒட்டி விண்வெளி தொழிற்பூங்கா அமையவுள்ள நிலையில், அதற்காகவும் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஆதியாக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, அங்கு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
.