சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் மத்திய கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங் யீ, பிரேசில் அரசுத் தலைவரின் முதன்மை சிறப்பு ஆலோசகர் செல்சோ அமோரிமுடன் 22ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
அப்போது வாங் யீ கூறுகையில், தற்போது பிரிக்ஸ் குடும்பம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் பதவி வகிக்கும் நாடாகப் பிரேசில் பதவியேற்றி, “பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பு” புதிய சாதனைகளை இடைவிடாமல் பெற செய்வதைச் சீனா ஆதரிக்கிறது. என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரேசிலில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது.
இந்நிலையில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துகள், இரு நாட்டு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக்குத் திசையைத் தெளிவுப்படுத்தியுள்ளன என்று அமோரிம் தெரிவித்தார்.