வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக கோலப் போட்டி நடைபெற்றது. இதில், ஒரே நேரத்தில் 100க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு வண்ண வண்ண கோலங்களை வரைந்து அசத்தினர்.
இந்த போட்டியில், வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் சேர்க்கை, வாக்குச்சாவடி, இந்தியா வடிவிலான கோலங்கள் இடம் பெற்றிருந்தன.
சிறந்த கோலங்களை வரைந்தவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கோலப்போட்டியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.