சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா vs இங்கிலாந்து இடையேயான 2025 டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தனது 2வது விக்கெட்டுடன் அவர் சிறப்பான சாதனையை எட்டினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளை எடுத்துள்ள முகமது ஷமி, இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் 150 ரன்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஷமி தற்போது 451 சர்வதேச விக்கெட்டுகளுடன் உள்ளார்.