சீனப் புத்தாண்டு, வசந்த விழா என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
இது வசந்த காலத்தின் தொடக்கத்திலிருந்து தொடங்குவதால் இது குளிர்காலத்தின் முடிவையும் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த நிலையில், வசந்த விழாவை ஒட்டி ஷாங்ஸி பகுதியில் பாரம்பரிய உடைகளை அணிந்து நடனமாடினர்.
மரம், செடிகள், பூக்களில் வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது போன்ற காட்சி அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
இதனைதொடர்ந்து பாரம்பரிய உடையணிந்து வந்த கலைஞர்கள் இசை வாத்தியங்கள் முழங்க டிராகனின் உருவத்தை ஏந்தி மேடையில் நடனமாடினர்.