சீனாவின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனச் சங்கம் அண்மையில் வெளியிட்ட தரவின்படி, ஜனவரி மாதம் நாட்டின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக் குறியீடு சிறிய முன்னேற்றம் பெற்றுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்ததை விட 0.1 விழுக்காடு உயர்ந்து, 89 புள்ளிகளை எட்டியுள்ளது.
சந்தைத் தேவையின் நிதானமான மேம்பாடு மற்றும் எதிர்கால வாய்ப்பு மீதான நேர்மறையான எதிர்பார்ப்பு ஆகியவற்றை இந்த அதிகரிப்பு வெளிப்படுத்துகிறது.
எட்டு தொழில்களை உள்ளடக்கிய சீன சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் கணக்கெடுப்பின் படி,6 துறைகளின் சந்தைக் குறியீடு சற்று அதிகரித்துள்ளது.மேலும் சமூக சேவைத் துறையின் அதிகரிப்பு தெளிவாக காணப்பட்டு, அதன் சந்தைக் குறியீடு 0.6 விழுக்காடு உயர்ந்துள்ளது.