அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்பது, மேலும் தீவிரமான சுங்க வரி மேலாதிக்கவாத செயலாக மாறியுள்ளது.
சீனாவின் மீதான சுங்க வரியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா மெக்சிகோவை அச்சுறுத்தியது. இதற்கு பதிலாக, மெக்சிகோவின் மீதான சுங்க வரியை அமெரிக்கா குறைக்கும் என தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் இந்நடவடிக்கை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியது.
மெக்சிகோ, சீனாவின் மீதான சுங்க வரியை அதிகரிக்க முக்கிய காரணம், அமெரிக்காவின் அச்சுறுத்தலாகும் என்று சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் உலக இணையத்தைப் பயன்படுத்துவோர்களிடம் நடத்திய கருத்து கணிப்பில் 70.4 விழுக்காட்டினர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.