7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. இப்பொருட்காட்சி 129 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3496 கண்காட்சியாளர்களை ஈர்த்தது.
இது கடந்தப் பொருட்காட்சியை விட அதிகம். முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியை நடத்துவது, புதிய சுற்று உயர் நிலையில் வெளிநாட்டுத் திறப்புப் பணியை முன்னேற்றும் முக்கிய முடிவாகும்.
இதன் மூலம் தனது சந்தையை உலகிற்குச் சீனா திறக்கும் முக்கிய நடவடிக்கையாகும் என்றார். சீனாவின் தொடர்ச்சியான திறப்புப் பணி, உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்தி, உலகப் பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளது.