தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அவருடைய கார் நெடுஞ்சாலை தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானது.
மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி நடிகர் யோகி பாபு உயிர் தப்பினார்.