திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அமைந்துள்ள ஊராளி பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நத்தம் அருகே உள்ள ஊராளிபட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழாயையொட்டி ராமேஸ்வரம், கரந்தமலை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோயிலின் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டது. பின்னர் புனித தீர்த்தமும், பூஜை மலர்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் காத்தம்பட்டி, ஏரக்காபட்டி, எட்டையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.