இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம், முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி மற்றும் மதுரையில் அமையவுள்ள புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.
அதேபோல், மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூ.314 கோடியில் மற்றொரு டைடல் பூங்கா அமைக்கப்படும்.
இந்தக் கட்டுமானங்களின் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்க அறிவிப்பு தெரிவிக்கிறது.
இந்த பூங்காக்களில் தரை தளம் உட்பட 12 தளங்களுடன் அமைக்கப்படவுள்ளன.
இந்த பணிகள் அனைத்தையும் தொடங்கி 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
