சீன-பிரேசில் உறவு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பிப்ரவரி 18-ஆம் நாள் கூறுகையில், சீனாவும் பிரேசிலும், உலகளாவிய பெரிய நாடுகளாகவும், உலக தென் பகுதியில் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஆற்றல்களாகவும் திகழ்கின்றன.
சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், இரு நாடுகளும் உலக அமைதி மற்றும் நிதானமான வளர்ச்சிக்கு ஆக்கமுடன் பங்காற்றியுள்ளன என்றார். மேலும், பிரேசிலுடன் இணைந்து, சீன-பிரேசில் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகள் மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றி, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, உலகத் தென் பகுதி நாடுகளின் உரிமை நலனைப் பேணிக்காக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
தவிரவும், இவ்வாண்டு, பிரிக்ஸ் அமைப்பின் தலைமை நாடாக பிரேசில் பதவி வகிப்பதை சீனா ஆதரிப்பதோடு, பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பு புதிய சாதனைகளைப் பெறுவதைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.