பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை திமுகவை சேர்ந்த சிலர் கருப்பு மை கொண்டு அழித்தனர்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோவை தெற்கு மாவட்ட திமுக திட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் 4 நபர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திலேயே அழிக்கப்பட்ட இந்தி எழுத்துகளை ரயில்வே அதிகாரிகள் மீண்டும் எழுதினர்.