ஒவ்வொரு வருடமும் அய்யா வைகுண்டரின் உதய விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற மாசி மாதம் 20ம் தேதி வைகுண்ட சுவாமியின் 193வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அய்யா வைகுண்டசுவாமி 193வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பணிகள், பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுவிடுமுறை கிடையாது என்பதால் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 8ம் தேதி அதாவது இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.