அமெரிக்காவின் முதலீட்டுக் கொள்கை மாற்றப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில், வெளியிட்ட அமெரிக்காக்கு முன்னுரிமை என்ற முதலீட்டு கொள்கை குறிப்பாணையில் தெரிவித்தது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான முதலீட்டு நடவடிக்கைகளை தடுப்பது இதன் முக்கிய அம்சமாகும்.
பாகுபாட்டுதன்மை வாய்ந்த இந்நடவடிக்கை தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், சந்தை ஒழுங்கை மீறியது. அது மட்டுமல்லாமல், இரு நாட்டு தொழில் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புகளையும் இது பாதித்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சொந்த நலனைப் பேணிக்காக்க ஆயத்தம் செய்ய உள்ளோம் என்று சீனா தெரிவித்தது.
சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் நலன் தரும். தேசிய பாதுகாப்பை சாக்குபோக்காக கொண்டு, சீனாவின் முதலீடுகளைத் தடுப்பதோடு, வாய்ப்புகளையும் அழித்துள்ளது. சந்தையின் விதி மிக வலிமைமிக்கது. சீன-அமெரிக்க தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் ஆர்வம் அதிகமானது. ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது, இரு நாடுகளின் மிக சரியான தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.