கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேனிக்கனிக்கோட்டை வனப்பகுதியில் வெளியேறி ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை உணவை தேடி நொகனூர் கிராமத்தின் அருகே விளைநிலங்களில் தஞ்சமடைந்துள்ளது.
இதனை கண்டு அச்சமடைந்த கிராம மக்கள், வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், விளைநிலங்களில் சுற்றித்திரியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.