தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படாத ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு குவிந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணி நியமன ஆணை கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் பொருந்திய முகக்கவசத்தை அணிந்துகொண்டு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிலர் பாடல்களை பாடியும், கவிதைகள் படித்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டு 8 மாதங்கள் ஆகியும், பணி வழங்கப்படாதது வேதனையளிப்பதாக தெரிவித்தனர்.