‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான அகாடமி விருதை வென்றுள்ளார்.
முன்னதாக 2003 ஆம் ஆண்டில், தி பியானிஸ்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக 29 வயதில் அவர் ஆஸ்கார் விருதை வென்ற போது, ஆஸ்கார் விருதை வென்ற இளையவர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது அவருடைய இரண்டாவது ஆஸ்கார் விருதாகும்.
தி ப்ரூடலிஸ்ட் திரைப்படத்தில், பிராடி லாஸ்லோ டோத் என்ற கற்பனையான ஹங்கேரிய நவீனத்துவ கட்டிடக் கலைஞராக அவர் நடித்திருந்தார்.
அவர் இரண்டாம் உலகப் போரில் இருந்து தப்பிப்பிழைத்து, அதன் வதை முகாம்கள் வழியாக அமெரிக்காவை சென்றடையும் கதாபாத்திரமாக அவர் வாழ்ந்திருந்தார்.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை ‘தி ப்ரூடலிஸ்ட்’ ஹீரோ அட்ரியன் பிராடி வென்றார்
