தொடர்ச்சியான பொருளாதார மீட்சியை முன்னெடுப்பதற்கு, சீரான நாணயச் சூழலை உருவாக்கும் வகையில், குறிப்பிட்ட இலக்குகளின் வழிக்காட்டுதலில், சில துறைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சீன மத்திய வங்கி தகவல் தெரிவித்தது.
ஓரளவு தளர்ச்சியான நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். முக்கிய நெடுநோக்கு திட்டங்கள், முக்கிய துறைகள் மற்றும் பலவீனமான தொடர்களுக்கான நிதி சேவையை வலுப்படுத்த வேண்டும். முக்கிய துறைகளிலுள்ள நாணய நெருக்கடியை பயனுள்ள முறையில் தவிர்க்க வேண்டும். நிதி துறையின் சீர்திருத்தம் மற்றும் திறப்பை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.