ராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பழைய பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு குளம்போல் காட்சியளித்தது.
பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல முடியாத சூழல் நிலவுவதால், பயணிகள் சாலைகளிலேயே இறக்கிவிடப்படும் அவல நிலை உருவானது. இதனால் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், மழைநீரை அகற்றி மக்களின் சிரமங்களை போக்க வேண்டும் எனவும், புதிய பேருந்து நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.