வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை திமுகவினர் தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்கான திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிசாலை மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், வத்தலக்குண்டு தேசிய நெடுங்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிக்கு விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் என நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், சுங்கச்சாவடியில் இருந்த உபகரணங்களை விவசாயிகளுடன் சேர்ந்து திமுகவினர் அடித்து நொறுங்கியுள்ளனர்.
சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.