கிரேக்க நாட்டின் புதிய அரசுத் தலைவராக பதவி ஏற்ற கங்ஸ்டான்டின்னோஸ் டசுலாஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 13ஆம் நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
சீனாவும் கிரேக்கமும் பாரம்பரிய வரலாற்றையும் செழுமையான பண்பாட்டையும் கொண்டிருக்கின்றன. இரு நாட்டுறவு நீண்டகாலமானது. ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியாக இரு நாடுகள் இருக்கின்றன. இரு நாட்டுறவில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன்.
கிரேக்க அரசுத் தலைவருடன் இணைந்து, சீன-கிரேக்க பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் அம்சங்களை இடைவிடாமல் செழிப்பாக்கி, சீன-ஐரோப்பிய உறவை முன்னேற்றி, உலகின் அமைதி நிதானம், வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்கு பாடுபட சீனா விரும்புகின்றது என்றார்.