கோவை, திருச்சி மாநகராட்சிகளைவிட ஈரோட்டில் அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள சொத்து வரி தொடர்பாக ஈரோடு மாநகராட்சி மேயர் நாக ரத்தினம் சுப்பிரமணி தலைமையில் சிறப்பு மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் கோவை , திருச்சி ஆகிய மாநகராட்சிகளை விட ஈரோட்டில் அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்க வேண்டும் என்றும், 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.