இசைஞானி இளையராஜாவின் நூற்றாண்டு கால திரையிசை பயணத்தை கொண்டாட அரசு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!! 

Estimated read time 1 min read

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

இசைஞானியின் பாடல்களை பிடிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்போனியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அவருக்கு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் இளையராஜா முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் நூற்றாண்டு கால திரையிசை பயணத்தை அரசன் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்யத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு அந்த விழா நடக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

Please follow and like us:

You May Also Like

More From Author