சீன-அர்ஜென்டீனப் பண்பாட்டு ஒத்துழைப்பு சாதனைகளுக்கான பரிமாற்ற நிகழ்ச்சியை சீனாவுக்கான அர்ஜென்டீனத் தூதரகம் டிசம்பர் முதல் நாள் நடத்தியது.
அர்ஜென்டீன-சீனப் பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் இரு நாட்டு மக்களின் நட்புறவை முன்னேற்றுவதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியொங் ஆற்றிய பங்கிற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதம், அந்நாட்டின் சர்வதேசப் பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்துக்கான தலைச்சிறந்த சாதனை விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஷென் ஹாய்சியொங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், அர்ஜென்டீனாவின் பல முக்கிய ஊடகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் சீன ஊடகக் குழுமம் ஒத்துழைப்பு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது.
எதிர்காலத்தில், இரு நாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்ற லட்சியத்தில் சீன ஊடகக் குழுமம் மேலும் பேரூகத்துடன் பங்கெடுத்து, புதிய யுகத்தில் சீன-அர்ஜென்டீன உறவின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்றார்.
அர்ஜென்டீனா பல்வேறு நாடுகளுடன், ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை, மானிட பரிமாற்றம் முதலியவற்றை முன்னேற்றுவதில் முக்கியப் பங்காற்றும் வெளிநாட்டு உயர்நிலை அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.