வடலூர் சத்திய ஞான சபையில் 154வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் மாவட்டம், வடலூரில் ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்பட்ட வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான 154வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
வள்ளலார் சத்திய ஞான சபை நிறுவ இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை தட்டுடன் வந்து சத்திய ஞான சபையில் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர், சத்திய ஞான சபையை சுற்றி வந்து மகா மந்திரம் ஓதப்பட்டு தைப்பூச கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில், ஏரளாமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
இதேபோல், வள்ளலார் பிறந்த மருதூர், சத்திய தர்மச்சாலை, வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வடலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.