இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 396 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக ஜெஸ்வால் 209 ரன்களை எடுத்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் இந்திய அணி 255 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்களை எடுத்தார். அக்சார் படேல் 45 ரன்களை எடுத்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஸ்வின் தலா 29 ரன்களை எடுத்தனர். ஜெய்ஸ்வால் 17 ரன்களும், ரோகித் சர்மா 13 ரன்களும் எடுத்தனர்.
இந்தநாள் இந்திய அணி 255 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அஹ்மத் 3 விக்கெட்களும், ஜேம்ஸ் 2 விக்கெட்களும், பஷீர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்கள் இலக்காக உள்ளது.