பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
காலித் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சைஃபுல்லா கசூரி, லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதி, இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது, 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் மூன்று வரைபடங்கள் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த சம்பவத்தின் போது, உயிர் பிழைத்தவர்கள் கொடுத்த விரிவான தகவல்கள் அடிப்படையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
அது மாட்டும் இல்லாமல், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிஃப் ஃபௌஜி, அபு தல்ஹா மற்றும் சுலேமான் ஷா ஆகிய மூன்று நபர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் மரணங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்ட தேடுதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#BREAKING: Sketches of Pahalgam attack terrorists have been released. pic.twitter.com/YxrvrbOb3O
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 23, 2025
நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் முதற்கட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள், பொதுமக்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் குற்றவாளிகளைக் கண்டறய உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.