சீன-அசர்பைஜான் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், அசர்பைஜான் அரசுத் தலைவர் அலியேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-அசர்பைஜான் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவை உருவாக்க வேண்டும் என்று இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

 

தத்தமது நலன்கள் மற்றும் அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்புகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளிப்பது, இரு நாடுகளுக்கிடையில் சிறந்த மரபுகளாகும். கல்வி, பண்பாடு, சுற்றுலா முதலிய துறைகளின் ஒத்துழைப்புகளுக்கு ஊக்கமளித்து ஆதரவளிக்க வேண்டும். இரு நாடுகளின் நட்பார்ந்த உறவை பொது மக்களின் அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

 

சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங்கின் உறுதியான தலைமையில், சீனப் பொருளாதாரம் மற்றும் சமூகம் விரைவாக வளர்ந்து வருகிறது. சீனத் தரப்புடன் இணைந்து, பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக் கட்டுமானத்தை விரைவுபடுத்த அசர்பைஜான் விரும்புகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் கட்டுமானம், எண்ணியல் பொருளாதாரம், பசுமையான எரியாற்றல் போன்ற துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்புகளை அசர்பைஜான் விரிவாக்க விரும்புவதாக அலியேவ் தெரிவித்தார்.

You May Also Like

More From Author