சீனாவில் 133கோடியைத் தாண்டிய அடிப்படை சுகாதார காப்பீட்டில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை

Estimated read time 1 min read

2025ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் அடிப்படை சுகாதார காப்பீட்டில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 133கோடியே 6லட்சத்து 81ஆயிரத்து 400யை எட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட, இது 40லட்சத்து 60ஆயிரமாக அதிகரித்துள்ளது என்று சீனத் தேசிய சுகாதார பாதுகாப்பு ஆணையம் 16ஆம் நாள் வெளியிட்ட தரவுகளில் காட்டியுள்ளது.

2025ஆம் ஆண்டு, மகப்பேறு காப்பீடு உள்ளிட்ட அடிப்படை சுகாதார காப்பீட்டு நிதியத்தின் மொத்த வருமானம் சுமார் 3.59லட்சம் கோடி யுவான் ஆகும். மொத்த செலவு கிட்டத்தட்ட 3லட்சம் கோடி யுவான் ஆகும். கிராமப்புறங்களில் குறைந்த வருமானமுடையவர்கள் மற்றும் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் 99விழுக்காட்டுக்கு மேலானோர் சுகாதார காப்பீட்டில் சேர்ந்துள்ளனர். அடிப்படை சுகாதார காப்பீடு, கொடிய நோய் காப்பீடு, மருத்துவ உதவி ஆகிய மூன்று அமைப்பு முறைகளின் மூலம் மருத்துவ சிகிச்சை பெற்ற கிராமப்புற குறைந்த வருமானமுடையவர்களின் எண்ணிக்கை 24கோடியே 62லட்சத்து 93ஆயிரத்தை எட்டியுள்ளது. 19ஆயிரத்து 339கோடி யுவான் மதிப்புள்ள மருத்துவ செலவின் சுமை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

 

You May Also Like

More From Author