இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது… பிசிசிஐ கௌரவிப்பு…!!!! 

Estimated read time 1 min read

இந்திய கிரிக்கெட்டில் ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் ‘பிசிசிஐ நமன் விருதுகள்’ வழங்கும் விழா, நாட்டின் தலைநகரான புது தில்லியில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட்டிற்கு அரிய தொண்டாற்றிய முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ இந்த ஆண்டு மூன்று ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டது.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலகக்கோப்பை வென்ற பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற்கு, ஐசிசி தலைவரான ஜெய் ஷா இந்த விருதினை வழங்கி கௌரவித்தார்.

மகளிர் கிரிக்கெட்டின் அடையாளமாகத் திகழும் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று கடந்த 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை நாயகரும், பிசிசிஐ தலைவருமான ரோஜர் பின்னியும் இந்த உயரிய விருதைப் பெற்றார்.

கடந்த ஓராண்டில் களத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கான விருதுப் பட்டியலில் இளம்புயல் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். அவருக்கு ‘ஆண்டின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர்’ விருது வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த விழா, இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகளைக் கொண்டாடும் விதமாக அமைந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author