ஈரானுக்கு சீனாவின் மனித நேய உதவி

சீன செஞ்சிலுவை சங்கம் ஈரானின் செம்பிறைச் சங்கத்திற்கு 2 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அவசர மனித நேய நிதியுதவி வழங்கும் ஒப்படைப்பு விழா 15ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் தெஹரான்னில் நடைபெற்றது. ஷாஜாரே தயேபே துவக்க பள்ளியின் உயிரிழந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து,  இந்நிதியுதவி வழங்கப்படும்.

ஈரானுக்கான சீனத் தூதர் சோபைய்வூ இந்த ஒப்படைப்பு விழாவில் கூறுகையில்,

பொது மக்கள் மற்றும் இராணுவம் சாராத இலக்குகள் மீதான அனைத்து தாக்குதல்களையும் சீனா கண்டிக்கிறது. பள்ளி மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சர்வதேச மனித நேய சட்டத்திற்குப் புறம்பானது. மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து, உலக பாதுகாப்பு ஆலோசனையை நடைமுறைப்படுத்த சீனா விரும்புகிறது. மத்திய கிழக்கு பகுதியின் ஒழுங்குகளை மீட்கவும், மக்களுக்கும் உலகத்திற்கும் அமைதியைக் கொண்டு வரவும் பாடுபட வேண்டும் என சீனா விரும்புகிறது என்றார். 

பிப்ரவரி திங்கள் 28ஆம் நாள் தொடங்கி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய முதல் நாளில், ஈரானின் ஒரு துவக்க பள்ளி தாக்கப்பட்டு, குறைந்தது 165 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலும் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author