இலங்கை  :  பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து –  21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Estimated read time 0 min read

இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் உள்ள குருணாகல் நோக்கி சுமார் 70 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கொத்மலை பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author