சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவு, உக்ரைன் நெருக்கடி குறித்து சீனாவின் கருத்துக்கள்

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 3ஆம் நாள், பெர்லின் நகரில், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் வாடெஃபுலுடன் இணைந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

 

அப்போது வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு, சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டாகும். இரு தரப்புறவு தொடர்ந்து புதிய காலக்கட்டத்தில் நுழைந்து, பன்முக நெடுநோக்குக் கூட்டாளிகளாக மாறியுள்ளன. தற்போதைய உலகில் அமைதியின் ஆற்றலாக சீனா விளங்குகிறது. மேலும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து, வளர்ச்சி வாய்ப்புகளை பகிர்ந்துகொண்டு, மனித குலத்துக்கான பொது எதிர்கால  சமூகத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாகவும் அவர் கூறினார்.

 

மேலும், உக்ரைன் நெருக்கடி பற்றி அவர் கூறுகையில், உக்ரைன் நெருக்கடி உலகின் கவனத்துக்குரிய முக்கியப் பிரச்சினையாகும். அமைதி பேச்சுவார்த்தையை நடத்துவதில் சீனா ஊன்றி நின்று வருகிறது. மோதலில் சிக்கியுள்ள தரப்புகளுக்கு அழிவு தரக்கூடிய ஆயுதங்களை வினியோகிக்கக் கூடாது. போர் நிறுத்தத்திற்கு முயற்சி செய்து முன்னேற்றுவதே சீனத் தரப்பின் வெளிப்படையான நிலைப்பாடு அகும். இது, சர்வதேச சமூகத்தின் பொது வரவேற்பை பெற்றுள்ளது. இந்நெருக்கடியைத் தீர்ப்பதில் பல்வேறு தரப்புகள் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி, பன்முக நோக்கிலும், நீண்டகாலக் கட்டுப்பாட்டுடனும் அமைதி உடன்படிக்கையை உருவாக்க வேண்டும் என சீனா விரும்புகின்றது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author