2025ம் ஆண்டு சீனத் தொழில் பரிமாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான இனைப்பு நிகழ்வு(குவாங்ஷி)ஜுலை 20ம் நாள் நான்னிங் நகரில் நடைபெற்றது.
“செயற்கை நுண்ணறிவின் புதிய உந்து சக்தியைப் பயன்படுத்தி, தொழில் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தை உருவாக்குவது”என்ற தலைப்பிலான இந்நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு, புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பம், உயர்நிலை சாதனத் தயாரிப்பு, சிறப்பு இலகுரகத் தொழில் முதலிய துறைகள் குறித்து, சிறப்பு பிரச்சாரம், அரசு-தொழில் ஒத்துழைப்பு, திட்டப்பணி ஒப்பந்த கையொப்பம் முதலியவை சுறுசுறுப்பாக நடைபெற்றன. தரவுகளின்படி, இந்நிகழ்வில் 296 திட்டப்பணிகளின் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களின் மொத்த தொகை, 21ஆயிரத்து 730 கோடி யுவானை எட்டியது என்று தெரிய வந்துள்ளது.
குவாங்ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தில் இந்நிகழ்வு நடத்தப்படுவது தொடர்ந்து 3வது முறையாகும். முந்தைய 2 தொழில் பரிமாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான இனைப்பு நிகழ்வில், மொத்தம் 69ஆயிரத்து 660கோடி யுவான் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.