முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எலும்புகளுக்கு பரவியுள்ள தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைடன் சிறுநீர் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.
அவரது மருத்துவக் குழு தற்போது சாத்தியமான சிகிச்சை முறைகளை மதிப்பீடு செய்து வருகிறது என்றும் முன்னாள் ஜனாதிபதி மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக ஆலோசனை செய்து வருகிறார்.
“இது நோயின் மிகவும் தீவிரமான வடிவத்தைக் குறிக்கும் அதே வேளையில், புற்றுநோய் ஹார்மோன் உணர்திறன் கொண்டதாகத் தோன்றுகிறது, இது பயனுள்ள மேலாண்மைக்கு அனுமதிக்கிறது,” என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
