இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது உறவு “மாறாமல்” இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொண்டால், அது “உலகின் பாதியை” அழித்துவிடும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் அமெரிக்காவில் எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது.
வெளியுறவுத்துறை மாநாட்டில் பேசிய செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “இராஜதந்திரிகள் இரு நாடுகளுக்கும் உறுதிபூண்டுள்ளனர்” என்றார்.
பாக்., ராணுவ தளபதியின் ஆயுத மிரட்டலுக்குப் பிறகு அமெரிக்கா கூறியது என்ன?
