சீன-பசிபிக் தீவு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 3வது கூட்டம் மே 28,29 ஆகிய நாட்களில் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் நடைபெறவுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இக்கூட்டத்துக்குத் தலைமை வகிப்பார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 21ஆம் நாள் தெரிவித்தார்.
சீனாவுடன் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 11 பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகளும், பசிபிக் தீவுகள் மன்றத்தின் துணைத் தலைமைச் செயலாளர் எசல நயாசி அம்மையாரும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.