புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகள் ஆய்வு என்ற புத்தகத்தின் புதிய பதிப்பு வெளியீடு

 

புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகள் ஆய்வு என்ற புத்தகத்தின் புதிய பதிப்பைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ஆவணப் பதிப்பகத்தால் அண்மையில் வெளியிட்டது.  

2023ஆம் ஆண்டு நவம்பர் முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி வரலாறு மற்றும் ஆவண ஆய்வு நிறுவனம் வெளியிட்ட 29 கட்டுரைகள் இப்புத்தகத்தில்  இடம் பெற்றுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கிய சிந்தனைகளைப் பற்றிய ஆய்வு, அதை நடைமுறைப்படுத்துவது, புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ அமைப்பு முறையின் ஆய்வை ஆவணங்களாக்குவது ஆகியவை இக்கட்டுரைகளின் முக்கிய அம்சமாகும்.

இப்புத்தகத்தின் முந்தைய 2 பதிப்புகள் முறையே 2020 மற்றும் 2023ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author