சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 10ஆம் நாள் காணொளி வழியாக முதலாவது ஐ.நா நாகரிக உரையாடல் என்ற சர்வதேச தினத்துக்கான உலகளாவிய நிகழ்வுக்கு உரை நிகழ்த்தினார்.
வாங்யீ கூறுகையில், உலகம் நூறு ஆண்டுகள் மாற்றங்களின் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் நாகரிகங்களிடையே உள்ள பரிமாற்றம் மிக முக்கியமாக மாறியுள்ளது. நாகரிக உரையாடலை முன்னேற்றுவிக்க, சீனா 3 முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. முதலாவது, நாகரிகத்தின் சமத்துவத்தைப் பேணிக்காப்பவராக விளங்க வேண்டும். இரண்டாவது, நாகரிக பரிமாற்றங்களைச் செயல்படுத்துபவராக விளங்க வேண்டும். மூன்றாவது, நாகரிக முன்னேற்றத்தை முன்னெடுப்பவராக விளங்க வேண்டும் என்று வாங்யீ குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற 78ஆவது ஐ.நா பொது பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10ஆம் நாள் நாகரிக உரையாடல் என்ற சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.