தேர்வு முறைகேடுகளை தடுக்க தென் கொரிய அரசு நடவடிக்கை

Estimated read time 0 min read

தென் கொரியாவில் நடைபெற்ற பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின்போது, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 111 மாணவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்ட ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவர்கள் பதில்களைத் தேடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென் கொரியாவில் கல்லூரி நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது. இதனால் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகச் சில மாணவர்கள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தியிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்ட 111 மாணவர்களும் தேர்வு விதிகளை மீறி மின்னணு சாதனங்களை மறைத்து எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பால் இவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேடுகளை முற்றிலுமாகத் தடுக்கத் தென் கொரிய அரசு ஏற்கனவே மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்பவர்களைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என அதிபர் லீ ஜே மியுங் மீண்டும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் இத்தகைய கடுமையான எச்சரிக்கையையும் மீறி 111 மாணவர்கள் சிக்கியிருப்பது கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதுடன், அடுத்தடுத்த தேர்வுகளை எழுதவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author