சீன வணிகத் துறை அமைச்சகம் 18ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனாவின் தைவான் பிரதேசம் மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோபாலிமர் பொலி மெத்திலைன் மீது பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.
தொடர்புடைய புலனாய்வுகளின்படி, இத்தகைய நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோபாலிமர் பொலி மெத்திலைன், பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான தன்மை இருந்தால், சீனப் பெருநிலப் பகுதியின் தொடர்புடைய துறைகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.
சீனாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிர்ப்பு விதியின்படி, மே 19ஆம் நாள் முதல், மேற்கூறியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட கோபாலிமர் பொலிஅசிட்டால் மீது பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான வரி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.