சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் சந்திப்பு

Estimated read time 0 min read

சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கூறியுள்ளார்.

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து கருத்து கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்து போல இருந்தது. ஒவ்வொருமுறை இவர்களை சந்திக்கும்போது, ஓர் அரவணைப்பு கிடைக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author