மேஷம் :
இராசி நாதன் செவ்வாய் நீச்ச நிலையில் இருந்து நட்பு நிலைக்கு அருகாமையில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும் காலம். குடும்பத்தில் சுப விரையம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன, பணவரவு நன்றாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், கணவர் மனைவி உறவு மேன்மையாக இருக்கும், தொழில் சம்பந்தப்பட்ட இலாபம் குறைந்து காணப்படும், எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் காலம்.
ரிஷபம் :
இராசி நாதன் சுக்கிரன் உச்சசத்தில் இருந்து வக்ர நிலைக்கு செல்ல இருப்பதால் மனதில் தெளிவற்ற சிநரதனைகள் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம். தொழிலில் நல்ல இலாபம் ஏற்படலாம், செலவுகள் சற்று குறைந்து காணப்படும் காலம், பணவரவில் சற்று பின்னடைவு ஏற்படலாம், உடன்பிறப்புகளுக்கு செலவுகள் செய்யும் நேரம். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் காலம்.
மிதுனம் :
இராசி நாதன் புதன் இராசிக்கு 12 ல் மறைந்துள்ளதால் முடிவு எடுப்பதில் சற்று குழப்பம் காணப்படலாம், தொடர்ந்து விடா முயற்சிகள் வெற்றியைக்கொடுக்கும். வண்டி வீடு வாகனம் போன்றவற்றால் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் நல்ல இலாபம் ஏற்படலாம், உத்தியோகத்தில் சம்பள உயர்வுகள் ஏற்படலாம், செலவுகளை ஈடு செய்யும் அளவிற்கு வரவுகள் இலாபம் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொண்டு வார்த்தைகளில் கவனம் தேவை.
கடகம் :
இராசி நாதன் சந்திரன் இலாபஸ்தானத்திலும் ஆட்சி பெற்று விரையஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழிலில் நல்ல இலாபம் ஏற்படலாம். குடும்பத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும் வாரம். நீண்ட நாள் தடைபட்ட முயற்சிகள் காரியங்கள் நிறைவேரும் நல்ல வாரம்.
சிம்மம் :
இராசி நாதன் சூரியன் பகை வீட்டில் உள்ளதால் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம், முயற்சிகள் தடை தாமதப்படலாம். தொழிலில் மேன்மை உத்தியோகத்திலும் மேன்மை ஏற்படும். கணவர் மனைவியிடையே விட்டுக்கொடுத்து சென்றால் குடும்ப வாழ்வில் சிறப்பாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் வரவு நன்மையை கொடுக்கும். காரியசித்தி ஏற்படும் நல்ல வாரம்.
கன்னி :
பாக்கியாதிபதி சுக்ரன் உச்சம் பெற்று இருப்பதால் நீண்ட நாள் தடைபட்ட எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேரும் நல்ல வாரம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மறைப்பொருள் அறியும் காலம், சாஸ்திர அமைப்புகளில் மேன்மை ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் வெற்றியைத்தரும். தன இலாபம் ஏற்படலாம், சுப நிகழ்ச்சிகள் நடைபெற சாதகமான வாரம்.
துலாம் :
இராசி நாதன் உச்சம் பைற்றுள்ளதால் முக்கியமான முடிவுகள் எடுப்பதில் தெளிவு ஏற்படும், தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் வாரம். அலைச்சல் மன அமைதியின்மை மன சஞ்சலங்கள் ஏற்படலாம். ஙிநாயகர் வழிபாடு தடைகளை நீக்கி வெற்றியைத் தரும். தந்தையினால் பண நஷ்டம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிதானத்துடன் செயல்பட்டால் நல்ல மேன்மையான வாரம்.
விருச்சிகம் :
இராசி நாதன் செவ்வாய் நீச்சம் பெற்றிருப்பதால் முயற்சிகளில் தடை, ஏற்படலாம். விடா முயற்சி வெற்றியைத்தரும். கணவர் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நண்பர்களால் ஆதரவு ஏற்படலாம். காரியத் தடை. முடிவு எடுப்பதில் குழப்பம், அலைச்சல் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
தனுசு :
இராசி நாதன் குரு பகவான் இராசிக்கு 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவர் மனவு உறவுகள் மேம்பட்டு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தன இலாபம் பண வரவுகள் மேம்படும். வண்டி வாகனம் புதுப்பிக்கும் பாக்கியம் உண்டு. கூட்டுத் தொழிலில் இலாபம் இருக்கும். வாரத்தின் பிற்பபகுதியில் மன சஞ்சலங்கள் கவலைகள் வீன் அலைச்சல் ஏற்படலாம்.
மகரம் :
இராசி நாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் கைகூடும், ஜீவன விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வண்டி வாகனங்கள் சம்பந்தமான செலவுகள் இருக்கலாம், பழைய கடன்கள் அடைக்க சாதகமான நேரம். . ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.. தன இலாபம் ஏற்படலாம். நண்பர்கள் வருகை நண்பர்களால் ஆதரவு மகிழ்ச்சி ஏற்படும். கணவர் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கும்பம் :
சிறு தூர பயணம் இலாபத்தை தரும். முயற்சிகள் வெற்றியைத் தரும் நல்ல வாரம். கலை துறையில் உள்ளவர்களுக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான காலம். இளைய சகோதர சகோதிரி ஆதரவு கிடைக்கும். மனக்கவலை மனசஞ்சலங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தன வரவு இருக்கும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
மீனம் :
இராசியில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மன கவலைகள் மன அழுத்தம் ஏற்படலாம். முயற்சிகள் தடை தாமதப்படலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக காணப்படும் வாரம். திடீர் பண வரவு பெண்களால் அவமானம் ஏற்படலாம். பணக்கஷ்டம் ஏற்படலாம். அஜீரண கோளாறுகள் எற்படலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
சுபம் !!!
தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்
9566620842 / 9944443215
astromanibharathy@gmail.com