2 நாள்களில் சவரனுக்கு ₹3,000-க்கு மேல் சரிந்த தங்கம் விலை!

Estimated read time 1 min read

தங்கம் விலை கடந்த வாரத்தில் ரூ. 1.07 லட்சத்தை தாண்டி நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய கணிப்புகளில் இனிவரும் நாட்களில் தங்கம் விலை குறைந்து இந்தியாவில் ஒரு சவரன் ரூ. 75,000 வரை விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்க நினைப்போரும், நகைச்சீட்டு போன்ற சிறிய அளவிலான முதலீடு செய்ய திட்டமிடுவோரும் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என நிபுணர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், தேர்தல் முடிவுகளால் விலை அதிகரித்த நிலையில், ஒரு சில நாட்களில் உலகலாளவிய சந்தையானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தொடங்கி இருக்கிறது. இதனால் மீண்டும் தங்கம் விலை குறையத் தொடங்கியிருக்கிறது.

தங்கம் விலை 2 நாள்களில் சவரனுக்கு ₹3,000-க்கு மேல் குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹200 குறைந்து ₹12,815-க்கும் 1 சவரன் ₹1,600 சரிந்து ₹1,02,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேநேரம் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. 1 கிராம் ₹200-க்கும் 1 கிலோ ₹2 லட்சத்திற்கும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,520 குறைந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author