உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

Estimated read time 0 min read

சென்னையின் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சமீரன் வெளியிட்டார். சென்னையில் 29.14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 14.04 லட்சம் ஆண் வாக்காளர்களும், 15,09 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 46,200 பேரும், 85 வயதை கடந்த 28,159 வாக்காளர்களும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தங்கள் செய்ய, டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.,4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடந்தன. இதில், 73 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. புதிய வாக்காளர்களை சேர்த்தல், திருத்தம் செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author