படத்தொழிலில் மட்டுமல்லாது, சமூக சேவையிலும் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கியுள்ள நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ், தனது சொந்த வீட்டை குழந்தைகளுக்கான இலவச கல்விப் பள்ளியாக மாற்றியுள்ளார்.
தற்போது ‘பென்ஸ்’, ‘ஹண்டர்’, ‘புல்லட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், இதற்கிடையே ‘காஞ்சனா 4’ படத்தையும் இயக்கி, நடித்து வருகிறார்.
இப்படங்களின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமூகத்தின் நலனுக்காக இயங்கும் தனது அறக்கட்டளை மூலம், பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வரும் அவர், தற்போது தனது முதல் வீட்டை கல்வி சேவைக்கு பயன்படுத்த போவது குறித்து ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தனது வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்
