சன் யாட் சென் அவர்களின் 160ஆவது பிறந்த நாள் நினைவு கூட்டம் 12ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார். தன்னுடைய உரையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் வாழும் சீனர்கள் மேலும் நெருக்கமாக ஒன்றுபட்டு, சீன தேசத்தின் மறுமலர்ச்சியைக் கூட்டாக விரைவுபடுத்தி, அண்மையுகம் தொட்டு, சீனாவின் பல்வேறு தேசிய இனங்களின் மாபெரும் கனவுகளை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், சன் யாட் சென் மகத்தான தேசிய வீரராகவும் நாட்டுப்பற்றாளராகவும் சீன ஜனநாயகத்தின் மகத்தான முன்னோடியாகவும் திகழ்ந்து, சீன மக்கள் மற்றும் சீன தேசத்திற்கு மிகச் சிறந்த பங்காற்றியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார். சன் யாட் சென் அவர்களின் புரட்சி இலட்சியத்திற்கு மிகவும் உறுதியான ஆதரவளிப்பவர்கள், விசுவாசமான பங்களிப்பாளர்கள் மற்றும் வெளிக்கொணர்வோராக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 100க்கும் மேலான ஆண்டுகாலத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள், பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட சீனத் தேசத்தின் உன்னதக் காவியத்தை எழுதியுள்ளனர். தற்போது, சன் யாட் சென் அவர்களை நினைவு கூரும் வகையில், அவரது அரிய எழுச்சியைப் படித்துப் பின்பற்றி, அவரின் சிந்தனைகளை வெளிக்கொணர்ந்து, நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை தொடர்ந்து முன்னேற்றப் பாடுபடுவோம் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்திற்கு முன்னதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிடோர், சன் யாட் சென் அவர்களின் குடும்பத்தினர், வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் உரையாடி மகிழ்ந்தனர்.
