நியூசிலாந்து முன்னாள் தலைமை அமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி

 

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் 100 முறைகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்தின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷிப்லி அம்மையார் இவ்வாண்டு மார்ச் திங்கள் மீண்டும் சீன பயணம் மேற்கொண்ட போது சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில், ஆசியா, உலக பொருளாதார வளர்ச்சிக்கான உந்து விசையாகத் திகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் ஆசியாவும், உலகின் சுறுசுறுப்பான பொருளாதார பிராந்தியமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், புத்தாக்க முன்னணியில் சீனா வகித்து வருகிறது என்பதை தனது புத்தாக்கச் சாதனைகள் வெளிக்காட்டியுள்ளன. சீனா, அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் ஊன்றி நின்று, வளர்ச்சி சாதனைகளைப் பகிர்ந்து கொண்டு, செழுமை இலக்கை நனவாக்குவதற்குப் பாடுபட்டு வருகிறது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் விளக்கிக் கூறினார். இதுவும், பன்னாட்டு மக்களின் பொது விருப்பமாகும். எனவே சீனா, உலகிற்கு முக்கிய செல்வாக்கை விளைவிக்கும். நியூசிலாந்துக்கும் சீனாவுக்குமிடையிலான அரசியல் சிந்தனை வேறுபட்ட போதிலும், இரு தரப்புகள் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து தொடர்பு நிலைநிறுத்தும் அடிப்படையில் கையோடு கைக்கோர்த்து முன்னேறலாம் என்றும் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author